இந்தியாவில் இருந்து அடுத்தவாரம் வரும் அரிசி கப்பல்கள்
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசியின் முதல் தொகுதி அடுத்த வாரம் கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என புறக்கோட்டை அரிசி இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உரிமம் இன்றி அரிசியை இறக்குமதி செய்ய தனியார் துறைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை அடுத்து சுமார் ஐம்பது இறக்குமதியாளர்கள் இந்தியாவில் இருந்து அரிசியை இறக்குமதி செய்துள்ளனர்.
ஒரு கிலோவுக்கு 65 ரூபா இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளதுடன், சந்தையில் கிலோ ஒன்று 225 – 230 ரூபாவுக்கு இடையில் விற்பனை செய்யப்படும்.
இதேவேளை, இறக்குமதி செய்யப்பட்ட அரிசி துறைமுகத்தை அடைந்து நான்கு மணித்தியாலங்களுக்குள் விடுவிக்க சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.