மின் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளாதிருக்க தீர்மானம் – ஏமாற்றத்தில் மக்கள்

மின் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளாதிருக்க தீர்மானம் – ஏமாற்றத்தில் மக்கள்

எதிர்வரும் 6 மாதங்களுக்கு மின்சாரக் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளாதிருக்க இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள்
ஆணைக்குழுவிற்கு வழங்கிய அறிவித்தலுக்கு பல்லவேறு தரப்பினரும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

நீர் மின் உற்பத்தியும் உயர்மட்டத்தில் இருக்கும் பின்னணியில் மக்களுக்கு மின்சாரக் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளாதிருப்பதற்கான
காரணங்களை அதிகாரிகள் விளக்க வேண்டும் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணத்தை திருத்தும் கொள்கையின்படி, இந்த வருடம்
இரண்டு முறை மின் கட்டணம் குறைக்கப்பட்டது.

இதன்படி, மார்ச் மாதத்தில் 21.9% ஆகவும், ஜூலையில் 22.5% ஆகவும் திருத்தம் மேற்கொள்ளபட்டது.

​​கடந்த ஒக்டோபர் மாத்தில் மின் கட்டணம் திருத்தம் மேற்கொள்ளப்பட்ட போதிலும் டிசம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

இறுதியில், இலங்கை மின்சார சபையின் மின் கட்டணத்தை 6% முதல் 11% வரை குறைக்கும் முன்மொழிவை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நிராகரித்தது.

தற்போதைய சூழ்நிலையிவல் மின்கட்டணத்தை அதிக சதவீதத்தால் குறைக்கலாம் என்றும் கூறப்பட்டது.

இவ்வாறானதொரு பின்னணியில், எதிர்வரும் 6 மாதங்களுக்கு மின்சாரக் கட்டணத்தை குறைக்காமல் தொடர்ந்தும் பேண வேண்டும் என இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் நேற்று மீண்டும் யோசனை முன்வைத்தது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நடத்திய விசாரணையில், மின்சாரக் கட்டணத்தில் 1.02% குறைந்த சதவீதத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம்
என மின்சார சபை தெரிவித்துள்ளது.

பலத்த மழை காரணமாக நீர்மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் அதிகரித்து,
நேற்றைய நிலவரப்படி நீர்மின் உற்பத்தி 56% ஆக காணப்பட்டது.

இந்நிலையில், மின்சார சபையின் முன்மொழிவு தொடர்பான தமது நிலைப்பாட்டை எதிர்வரும் ஜனவரி 3ஆம் வாரத்திற்குள்
அறிவிக்கவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

 

 

Share This