2026 கால்பந்து உலகக் கிண்ண தொடருக்கு அர்ஜென்டினா தகுதி

2026 கால்பந்து உலகக் கிண்ண தொடருக்கு அர்ஜென்டினா தகுதி

நடப்பு சம்பியனான அர்ஜென்டினா 2026 கால்பந்து உலகக் கிண்ண தொடருக்கு தகுதி பெற்றுள்ளது.

உருகுவே-பொலிவியா அணிகளுக்கு இடையிலான போட்டி கோல் எதுவுமின்றி சமநிலையில் முடிந்ததால் அர்ஜென்டினா தகுதி பெற்றது.

இதன்படி, 2026 கால்பந்து உலகக் கிண்ண தொடருக்கு தகுதி பெற்ற முதல் லத்தீன் அமெரிக்க நாடு என்ற பெருமையையும் அர்ஜென்டினா பெற்றுக்கொண்டுள்ளது.

அர்ஜென்டினா 13 போட்டிகளில் 28 புள்ளிகளைப் பெற்றுள்ளது. அடுத்த ஆண்டு ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை நடைபெறும் உலகக் கோப்பையை கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்கா நடத்துகின்றன.

தென் அமெரிக்காவிலிருந்து ஆறு நாடுகள் நேரடியாகத் தகுதி பெறுகின்றன. ஏழாவது இடத்தைப் பிடிக்கும் அணி இன்டர்காண்டினென்டல் பிளேஆஃப்களில் விளையாட வேண்டும்.

உலகக் கிண்ண தொடரை நடத்தும் நாடுகளைத் தவிர, ஜப்பான், நியூசிலாந்து மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் ஏற்கனவே உலகக் கிண்ண தொடருக்கு தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Share This