ரஷ்யா மற்றும் உக்ரைன் கடல், எரிசக்தி போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்

கடல் மற்றும் எரிசக்தி இலக்குகளுக்கு எதிரான தாக்குதல்களை நிறுத்துவதற்காக உக்ரைன் மற்றும் ரஷ்யாவுடன் அமெரிக்கா தனித்தனி ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.
உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் போர் நீடித்துள்ள பின்னணியில் இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.
எனினும், கருங்கடல் கடல்சார் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் எப்போது அல்லது எப்படி தொடங்கும் என்பது தெளிவாகத் தெரிவிக்கப்படவில்லை.
உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவரவும், கிய்வ் மற்றும் ஐரோப்பிய நாடுகளை கவலையடையச் செய்த மொஸ்கோவுடன் விரைவான நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் டிரம்ப் அழுத்தம் கொடுக்கிறார்.
இதன்படி, ரஷ்ய விவசாயம் மற்றும் உர ஏற்றுமதிகள் மீதான சர்வதேச தடைகளை நீக்குவதற்கு உதவ அமெரிக்காஉறுதியளித்துள்ளது, இது ரஷ்யாவின் நீண்டகால கோரிக்கையாகும்.
அமெரிக்க அறிவிப்புகளுக்குப் பிறகு, சில ரஷ்ய வங்கிகளுக்கும் சர்வதேச நிதி அமைப்புக்கும் இடையிலான தொடர்புகள் மீட்டெடுக்கப்படாவிட்டால் கருங்கடல் ஒப்பந்தங்கள் நடைமுறைக்கு வராது என்று ரஷ்யா கூறியது.
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, போர் நிறுத்த ஒப்பந்தங்கள் நடைமுறைக்கு வருவதற்கு தடைகள் நிவாரணம் தேவையில்லை என்றும் உடனடியாக நடைமுறைக்கு வரும் என்றும் தனது புரிதல் இருப்பதாகக் கூறினார்,
“ரஷ்ய தரப்பினர்கள் ஒப்பந்தங்களை சிதைக்க முயற்சிக்கிறார்கள் எனவும், முழு உலகத்தையும் ஏமாற்றுகிறார்கள்,” என்று ஜெலென்ஸ்கி குறிப்பிட்டிருந்தார்.
“ரஷ்யர்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை எனவும் ஆனால் நாங்கள் ஆக்கப்பூர்வமாக இருப்போம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், கிய்வ் மற்றும் மொஸ்கோ இரண்டும் ஒப்பந்தங்களைச் செயல்படுத்த அமெரிக்காவை நம்பியிருப்பதாகக் கூறின, அதே நேரத்தில் மறுபக்கம் அவற்றைக் கடைப்பிடிக்கும் என்பதில் சந்தேகம் தெரிவித்தன.
அறிவிப்புகளைத் தொடர்ந்து சில மணிநேரங்களில், ரஷ்யாவும் உக்ரைனும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாக ஒருவரையொருவர் குற்றம் சாட்டின.
ஆனால் கருங்கடல் அல்லது எரிசக்தி இலக்குகளைத் தாக்கியதாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.