பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சந்தையில் விசேட பரிசோதனைகள் – நுகர்வோர் அதிகாரசபை

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சந்தையில் விசேட பரிசோதனைகள் – நுகர்வோர் அதிகாரசபை

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சந்தையில் விசேட பரிசோதனைகள் மற்றும் விசாரணைகள் இன்று முதல் ஆரம்பிக்கும் என்று நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் வாரத்திற்குள் தொகை கையிருப்புகள் தொடர்பில் அதிக அவதானம் செலுத்தி விசேட சோதனைகள் மேற்கொள்ளப்படும் என நுகர்வோர் அதிகார சபையின் தகவல் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்தார்.

விலை குறைப்பு என்ற போர்வையில் செய்யப்படும் பல்வேறு மோசடிகள் குறித்து அவதானமாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், இந்த விசேட சோதனை நடவடிக்கைகள் பண்டிகை காலம் முடியும் வரை தொடரும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Share This