வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டவைகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை  – தேசிய காங்கிரஸ்

வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டவைகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை  – தேசிய காங்கிரஸ்

அம்பாறையில் நான்கு சபைகளில் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டு இருந்தாலும்,திருகாேணமலையில் ஆறு சபைகளிலும் தேசிய காங்கிரஸின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் காெள்ளப்பட்டுள்ளதாக தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய காெள்கை பரப்புச் செயலாளர் சட்டத்தரணி மர்சூம் மௌலானா தெரிவித்தார்.

ஏறாவூர் நகரசபை மற்றும் அக்கரைப்பற்று, சம்மாந்துறை பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ப்பட்டுள்ளன.

அக்கரைப்பற்று மாநகர சபை உட்பட ஏனைய மூன்று சபைகளுக்கான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு இருந்தாலும் அதற்கெதிரான சட்ட நடவடிக்கைகளைத் தாெடர்வதற்கான பணிகளை கட்சி மிக தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.

எனவே, தீயசக்திகளின் பொய்ப் பிரசாரங்களை முறியடித்து தேசிய காங்கிரஸின் ஆதரவாளர்கள் இது தொடர்பில் தெளிவாக இருக்குமாறு கட்சியின் தலைமை வேண்டி நிற்கிறது.

தீயசக்திகள் எத்தனை மாயவலைகளை பின்னினாலும் அவற்றை முறியடிக்கும் என்பதை நாம் பலமுறை நிரூபித்து இருக்கிறாேம், அற்ப சலுகைகளுக்காக தே.கா. வின் தலைமை ஒரு பாேதும் சோரம் பாேனதாக வரலாறு ஏதும் இல்லை என்று சட்டத்தரணி மர்சூம் மௌலானா மேலும் தெரிவித்துள்ளார்.

Share This