குத்துச்சண்டை ஜாம்பவான் ஜார்ஜ் ஃபோர்மேன் காலமானார்

குத்துச்சண்டை ஜாம்பவனான ஜார்ஜ் ஃபோர்மேன் அமெரிக்காவை சேர்ந்தவர் ஆவார்.
இவர் 1968இல் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றார். மேலும், 21 வருட இடைவெளியில் இரண்டு முறை உலக ஹெவிவெயிட் சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளார்.
இதன்மூலம், வரலாற்றில் இரண்டாவது முறையாக 45 வயதில் மிக வயதான சாம்பியனானார். 1974ஆம் ஆண்டு நடந்த பிரபலமான ரம்பிள் இன் தி ஜங்கிள் சண்டையில் முகமது அலியிடம் தோல்வியை தழுவினார்.
ஆனால் ஃபோர்மேனின் தொழில்முறை குத்துச்சண்டை வாழ்க்கை 68 நாக் அவுட்கள் உட்பட 76 வெற்றிகளைப் பெற்று வியக்கத்தக்க வகையில் பெருமை சேர்த்துள்ளது.
1997ஆம் ஆண்டு அவர் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு அவரது குடும்பத்தினர் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவில் கூறியதாவது, மனிதாபிமானம் கொண்டவர், ஒலிம்பியன் மற்றும் இரண்டு முறை உலக ஹெவிவெயிட் சாம்பியனான ஜார்ஜ் ஃபோர்மேன் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.