அநுர அரசாங்கத்தின் கன்னி பட்ஜெட் – மூன்றாம் வாசிப்பு பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்

அநுர அரசாங்கத்தின் கன்னி பட்ஜெட் – மூன்றாம் வாசிப்பு பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கன்னி வரவு- செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் இன்று வெள்ளிக்கிழமை மாலை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 159 வாக்குகளும் எதிராக 45 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன. இதன் மூலம் 114 மேலதிக வாக்குகளால் வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி 17ஆம் திகதி வரவு – செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, அஸ்வெசும கொடுப்பனவு அதிகரிப்பு, முதியோர் மற்றும் விசேட தேவையுடையோருக்கான கொடுப்பனவு அதிகரிப்பு உட்பட பல்வேறு சலுகைகளை ஜனாதிபதி, தமது அரசு செலவுத் திட்டத்தில் அறிவித்திருந்தார்.

18ஆம் திகதி முதல் இன்று 21ஆம் திகதிவரை வரவு- செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு இடம்பெற்று நிறைவேற்றப்பட்டது. குழுநிலை விவாதங்களை தொடர்ந்து இன்று வெள்ளிக்கிழமை மார்ச் 21ஆம் திகதி மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நிறைவேற்றப்பட்டது.

CATEGORIES
TAGS
Share This