ஜேவிபியால் கொல்லப்பட்ட ஐ.தே.க உறுப்பினர்களின் பட்டியல் நாடாளுமன்றத்தில் சமர்பிப்பு

ஜேவிபி மூலம் 1988/89ஆம் ஆண்டுகளில் இந்நாட்டில் நடத்திய ஆயுதக் கிளர்ச்சியின் போது கொல்லப்பட்டதாகக் கூறப்படும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களின் பட்டியல் இன்று (21 நாடாளுமன்ற உறுப்பினர் ரோகிணி கவீரத்னவால் சமர்ப்பிக்கப்பட்டது.
அதன்படி, இதில் உள்ளடங்காதவர்களின் பெயர்களை ஏப்ரல் மாதம் இடம்பெறவுள்ள “பட்டலந்த விவாதத்தின்” போது சபையில் சமர்பிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
இதேவேளை, இன்று (21) நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட இந்த பட்டியலை சமூக
ஊடகங்களிலும் அவர் வெளியிட்டுள்ளார்.