தேசபந்து தென்னகோனுக்கு பிணை வழங்கப்படுமா? – தீர்மானம் இன்று!

தேசபந்து தென்னகோனுக்கு பிணை வழங்கப்படுமா? – தீர்மானம் இன்று!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், இன்று (20) மீண்டும் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

தேசபந்து தென்னகோன் மூலம் முன்வைக்கப்பட்ட பிணை மனுவை மேலும் பரிசீலிப்பதற்காக அவர் இவ்வாறு இன்று (20) மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

அதன்படி, இந்த வழக்கு பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

2023ஆம் ஆண்டு வெலிகம W15 ஹோட்டலுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக கைது செய்யுமாறு திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த தேசபந்து தென்னனகோன், நேற்று (19) நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இது தொடர்பான உண்மைகளை பரிசீலித்த பின்னர், பிணை வழங்குவதா இல்லையா என்பது குறித்து இன்று (20) தீர்மானிக்கப்படும் என்று கூறி, முன்னாள் பொலிஸ் மா அதிபரை விளக்கமறியலில் வைக்க மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதனைத் தொடர்ந்து, தேசபந்து தென்னகோன் நேற்று (19) பிற்பகல் விசேட பாதுகாப்பின் கீழ் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Share This