புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கவே தவிசாளர் பதவி விலகினார்

புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கவே தவிசாளர் பதவி விலகினார்

புதியவர்களுக்கு வாய்ப்பளிப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவி விலகினார் என அக்கட்சியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

இன்று (19) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

டில்வினைப் போன்று அவர்களை எப்போதும் பிடித்து வைப்பதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த நளின் பண்டார,

“பிங்கிரிய, உடுபத்தாவை தலைவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்தே நியமிக்கப்படுவார்கள் என்பதை நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

அதேபோல், உள்ளூராட்சி மன்ற 300 நிறுவனங்களில் நூற்றுக்கும் அதிகமானவை ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட பொது எதிர்க்கட்சியில் நியமிக்கப்படும்.” எனத் தெரிவித்தார்.

Share This