‘பதுல்லே படா’ யார்? கோபமடைந்த சாமர சம்பத்

எனது வயிற்றை குறைப்பதற்காக நடக்கின்றேன். குறையவில்லை. அதற்காக நான் என்ன செய்வது, எனது வயிறு இங்குள்ளவர்களுக்கு பிரச்சினை என்றால், என்னதான் செய்வது. இந்த வயிறு தெய்வம் தந்த வயிறு என்று பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசாநாயக்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் சிறப்புரிமை பிரச்சினையை இன்று செவ்வாய்க்கிழமை (18) எழுப்பிய அவர், மேற்கண்டவாறு கூறினார்.
முன்னதாக சிறப்புரிமை பிரச்சினையை முன்வைத்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, சமீபத்தில் நடைபெற்ற கோப் குழுக் கூட்டத்தின் போது, தன்னை ‘பதுல்லே படா’ என்று குறிப்பிட்ட கோப் உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.
‘பதுல்லே படா’ என்று கோப் உறுப்பினர் குறிப்பிட்டது தெளிவாகத் தெரிகிறது. ஏனெனில் பதுளை மாவட்டத்தில் பெரிய வயிறு கொண்ட வேறு எந்த நாடாளுமன்ற உறுப்பினரும் இல்லை. அமைச்சர் சமந்த வித்யாரத்ன உட்பட பதுளையில் உள்ள மற்றவர்களுக்கு வயிறு இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது” என்றும் சாமர சம்பத் தசநாயக்க கூறினார்.
“கோப் உறுப்பினர்களுக்கு நீங்கள் அறிவுரை வழங்க வேண்டும், கூட்டங்களின் போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென சொல்விக்கொடுக்க வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.