ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான வாகனத்தில் வெடிபொருட்கள்

ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான வாகனத்தில் வெடிபொருட்கள்

ஜனாதிபதி செயலகத்தின் நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்த விமானப்படை ஜீப் வண்டியில் இருந்து வெடிபொருட்களுடன் விமானப்படை வீரர் ஒருவரும் மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவில் இணைக்கப்பட்ட 34 வயது விமானப்படை வீரர் மற்றும் களனிப் பகுதியைச் சேர்ந்த 60 வயது நபர் ஒருவரே நேற்று (17) இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வெடிபொருட்கள் ஒரு புதையலை அழிக்க பயன்படுத்த கொண்டு வரப்பட்டதாக தற்போது பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This