அதானி நிறுவனத்தின் திட்டத்துக்கு எதிரான மனு வாபஸ்

மன்னார் வெடித்தலத்தீவு பகுதியில் அதானி நிறுவனம் முன்னெடுக்கவிருந்த காற்றாலை திட்டத்தை நிறுத்துமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் இன்று செவ்வாய்க்கிழமை மீளப் பெறப்பட்டுள்ளன.
இந்த மனுவை சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் உட்பட ஐந்து தரப்பினர் சமர்ப்பித்தனர்.
அதானி நிறுவனம் சம்பந்தப்பட்ட திட்டத்திலிருந்து விலகுவதாக இலங்கை முதலீட்டு திணைக்களத்துக்கு எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்துள்ளதாக சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு இன்று தெரியப்படுத்தியதையடுத்தே மேற்படி மனுக்களை குறித்த தரப்பினர் மீளப் பெற்றுள்ளனர்.
என்றாலும், அதானி நிறுவனம் விலகுவதாக அறிவித்த திட்டங்கள் குறித்து தொடர்ந்து இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுகள் நடத்தி வருவதாக “தி இந்து“ பத்திரிக்கை செய்தியொன்றை வெளியிட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.