முப்படையிலிருந்து தப்பிச் சென்ற 1246 பேர் கைது

முப்படையிலிருந்து சட்டபூர்வமாக இராஜினாமா செய்யாமல் தப்பிச் சென்ற 1246 பேர் கடந்த 21 நாட்களுக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, கடந்த 21 நாட்களுக்குள் முப்படைகள் மற்றும் பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைகளில் இவ்வாநு 1246 பேர் கைது செய்யபட்டுள்ளனர்.
இராணுவத்திலிருந்து தப்பியோடிய நபர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளின் போது இராணுவ சேவையில் ஈடுபட்டிருந்த மூன்று அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, முப்படையினரால் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 950 இராணுவ வீரர்கள், 45 கடற்படை வீரர்கள் மற்றும் 102 விமானப்படை வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை பொலிஸார் நடத்திய சோதனை நடவடிக்கைகளில், இராணுவத்தைச் சேர்ந்த 114 பேர், கடற்படையைச் சேர்ந்த 19 பேர் மற்றும் விமானப்படையைச் சேர்ந்த 13 பேர் உட்பட 146 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.