பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான பெண் வைத்தியரின் கையடக்கத் தொலைபேசி கண்டுபிடிப்பு

பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான பெண் வைத்தியரின் கையடக்கத் தொலைபேசி கண்டுபிடிப்பு

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பெண் வைத்தியரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரால் திருடப்பட்டதாக கூறப்படும் குறித்த வைத்தியரின் கையடக்கத் தொலைபேசி பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நிதிகும்பய மற்றும் மகாமெவ்ன அசபுவ இடையேயான காட்டுப் பகுதியில் நேற்று (16) நடத்தப்பட்ட தேடுதலின் போது இந்த ஐபோன் ரக கையடக்கத் தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டதாக கல்னேவ பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்தின் முக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்ட இடத்திலிருந்து சுமார் 600-800 மீட்டர் தொலைவில் கையடக்கத் தொலைபேசி கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர் கைது செய்யப்பட்ட பின்னர் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, ​​வைத்தியரிடமிருந்து திருடப்பட்ட கையடக்கத் தொலைபேசியை காட்டில் வீசி எறிந்ததாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This