இரவு வேளையில் பலத்த இடி, மின்னல் ஏற்படும் சாத்தியம்

இரவு வேளையில் பலத்த இடி, மின்னல் ஏற்படும் சாத்தியம்

இரவு வேளையில் பலத்த இடி, மின்னல் ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்கும், அனுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கும் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இன்று (18) அதிகாலை 3.00 மணிக்கு திணைக்களத்தால் வெளியிடப்பட்ட இந்த அறிவுறுத்தல் இரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும்.

இடியுடன் கூடிய மழையின் போது மின்னலினால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Share This