வடக்கு மாசிடோனியாவில் இரவு விடுதியில் தீ விபத்து – ஐம்பது பேர் உயிரிழப்பு

வடக்கு மாசிடோனியாவில் உள்ள ஒரு இரவு விடுதியில், ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 50 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், இந்த விபத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் ஸ்கோப்ஜேயிலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் கிழக்கே உள்ள ஒரு நகரமாகும், அங்குள்ள இரவு விடுதியில் “சுமார் 1,500 பேர் ஒரு இசை நிகழ்ச்சிக்கு கலந்து கொண்டனர்”.
இந்நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தீவிபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி மூன்று மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.
விபத்தில் காயமடைந்தவர்கள் நகரத்திலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தெற்கே அமைந்துள்ள கோகானி மற்றும் ஸ்டிப்பில் உள்ள உள்ளூர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நிகழ்ச்சியின் போது வாணவேடிக்கைகளைப் பயன்படுத்தியதால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.