தேசபந்து தென்னகோனின் மனைவியிடமிருந்து வாக்குமூலம் பதிவு

தேசபந்து தென்னகோனின் மனைவியிடமிருந்து வாக்குமூலம் பதிவு

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் மனைவியும் மகனும் அவர்களுக்குச் சொந்தமான வீட்டிற்குத் திரும்பியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அவர்கள் இருவரும் திரும்பி வந்ததை அறிந்ததும், அவர்களுடைய வீட்டிற்குச் சென்று மனைவியிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும், தேசபந்து தென்னகோன் இருக்கும் இடம் குறித்து எந்த தகவலும் அறியவில்லை எனஅவர்கள் தெரிவித்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தறை வெலிகம பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் முன் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட 8 பேரைக் கைது செய்து முன்னிலைப்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை (28) உத்தரவிட்டது.

எவ்வாறாயினும், தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 15 நாட்கள் கடந்துவிட்ட போதிலும் இன்றுவரை அவர் தொடர்பான எந்த தகவலும் கிடைக்கவில்லை.

 

Share This