முகப்புத்தகத்தில் சபாநாயகரை விமர்சித்த தேசப்பிரிய
சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல தனது பட்டப்படிப்பை முடித்திருந்தால் அதனை நிரூபிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சவால் விடுத்துள்ளார்.
அவ்வாறு செய்யத் தவறினால் சபாநாயகர் பதவி விலக வேண்டும் என தனது முகநூல் பதிவில் தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.
சபாநாயகர் பதிலளிக்கத் தவறினால், கட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.