ஐக்கிய மக்கள் சக்திக்கு காலஅவகாசம் வழங்கியுள்ள ரணில் அணி

ஐக்கிய மக்கள் சக்திக்கு காலஅவகாசம் வழங்கியுள்ள ரணில் அணி

கொழும்பு மாநகர சபைக்காக எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கூட்டாக இணைந்து போட்டியிடுவது தொடர்பில் தனது முடிவை தெரிவிக்க ஐக்கிய தேசியக் கட்சி, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்கு காலஅவகாசம் வழங்கியுள்ளது.

அதன்படி, எதிர்வரும் மார்ச் மாதம் 20ஆம் திகதி வரையில் ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்திக்கு காலஅவகாசம் வழங்கியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்களிடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி மற்ற உள்ளூராட்சி நிறுவனங்களுக்கும் கூட்டணியை விரிவுபடுத்த விரும்பினால், காலக்கெடுவிற்கு முன்பே அந்த அறிவிப்பை வெளியிடலாம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தி கொழும்பு மாநகர சபை தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

CATEGORIES
TAGS
Share This