அமைச்சு பங்காளாக்களை கோரும் வெளிநாட்டு தூதரகங்கள்

அமைச்சு பங்காளாக்களை கோரும் வெளிநாட்டு தூதரகங்கள்

இலங்கையில் உள்ள நான்கு வெளிநாட்டு தூதரகங்கள் அவர்களின் அலுவலகங்களை இயக்குவதற்காக அமைச்ச பங்களாக்களை வழங்குமாறு பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

பல்கலைக்கழக விடுதிகளுக்காகவும் அமைச்சு பங்களாக்கள் கோரப்பட்டுள்ளதாக அமைச்சு தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சுமார் 20 நிறுவனங்கள் மற்றும் நபர்கள் இதுவரையில் அமைச்சு பங்களாக்களை கோரியுள்ளதாக தெரியவருகிறது.

இதேவேளை, அமைச்சு பங்களாக்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்திய குழுவின் அறிக்கை அண்மையில் அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டுள்ளதுடன் விரைவில் அமைச்சரவை தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் கூறப்படுகிறது.

Share This