எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தின் தர்ம சொற்பொழிவு

ஒவ்வொரு போய தினத்திலும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் ஆலோசனையின் பிரகாரம் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்படும் தர்ம சொற்பொழிவு இன்று (13) வரலாற்று சிறப்பு மிக்க பெல்லன்வில ரஜமஹா விகாரையில் இருந்து நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
பெல்லன்வில ரஜமஹா விகாராதிபதி கலாநிதி சங்கைக்குரிய தர்மரத்ன நாயக்க தேரரினது ஆலோசனை பிரகாரம் உடஹமுல்ல பஞ்சோதனராம பிரிவினாவைச் சார்ந்த கலாநிதி சாஸ்த்ரபதி வல்கம சுமண தேரர் இந்த தர்ம சொற்பொழிவை நிகழ்த்தினார்.