பெருந்தோட்ட தொழிலாளியை தாக்கிய சிறுத்தை – பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி
பொகவந்தலாவ பகுதியில் பெருந்தோட்ட தொழிலாளி ஒருவரை சிறுத்தை தாக்கிய சம்பவம் ஒன்று கடந்த 5ஆம் திகதி வியாழக்கிழமை பதிவாகியுள்ளது.
இதன்போது படுகாயமடைந்த 53 வயதுடைய பெண், பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக டிக்கோயா- கிளங்கள் ஆதார வைத்திசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குறித்த பெண் பொகவந்தலாவ – மோரா பகுதியியை சேர்ந்தவர் எனவும் போபத்தலாவ பகுதிக்கு கொளுந்து பறிக்க சென்ற வேளையில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும், குறித்த பெண்ணின் உடல் முழுவதும் சிறுத்தை தாக்கியதில் நக காயங்கள் காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பிலான மெலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.