2025ஆம் ஆண்டு தெற்காசிய கால்பந்து கிண்ண தொடரை இலங்கை நடத்துகிறது

ஜூன் இல் நடைபெறவிருக்கும் 2025 தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு (SAFF) சம்பியன்ஷிப்பை நடத்தும் உரிமை இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் (FFSL) தலைவர் ஜஸ்டர் உமரின் முறையான கோரிக்கையைத் தொடர்ந்து தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு உறுப்பு நாடுகளால் இந்த தனித்துவமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடைசியாக 2008 ஆம் ஆண்டு தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சம்பியன்ஷிப்பை நடத்தியது.
17 வருட நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, “தெற்காசியாவின் உலகக் கோப்பை” என்று கருதப்படும் இந்தப் போட்டியில் பங்கேற்க இலங்கைக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும்.