இந்திய ஆசிரியர் யோசனை இன அழிப்பின் மற்றுமொரு அங்கம் – அருட்தந்தை மா.சத்திவேல்

இந்திய ஆசிரியர் யோசனை இன அழிப்பின் மற்றுமொரு அங்கம் – அருட்தந்தை மா.சத்திவேல்

‘இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை வரவழைத்து அவர்களுக்கு ஆசிரிய நியமனம் கொடுக்க வேண்டும் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணனின் கோரிக்கைக்கு பின்னால் மலையக கல்வி வளர்ச்சிக்கு அப்பாற்பட்ட மர்ம அரசியல் காய்நகர்த்தல் உள்ளதாகவே சந்தேகம் கொள்ளத் தோன்றுகின்றது.” – என்று சமூக செயற்பாட்டாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,

” மலையகத்தில் படித்த பட்டதாரிகள் உட்பட நூற்றுக்கணக்கான வேலையற்ற தமிழ்மொழியிலான பட்டதாரிகள், வேலையின்மை காரணமாக வீதியில் இறங்கி போராட்டம் நடத்திவருகின்றனர்.

இந்நிலையில் மலையக கல்வித் துறை சார்ந்து அவர்களை ஆசிரியர் சேவையில் உள்வாங்கும் சமூக எழுச்சி வேலைத்திட்டத்தை முன்வைக்காது , அவர்களை புறந்தள்ளி மலையக கல்வி வளர்ச்சிக்கு இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை வரவழைத்து அவர்களுக்கு ஆசிரிய நியமனம் கொடுக்க வேண்டும் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணனின் கோரிக்கைக்கு பின்னால் மலையக கல்வி வளர்ச்சிக்கு அப்பாற்பட்ட மர்ம அரசியல் காய்நகர்த்தல் உள்ளதாகவே சந்தேகம் கொள்ளத் தோன்றுகின்றது.

தற்போது இந்தியாவில் இயங்கும் அதி தீவிரவாத சமய இயக்கமான சிவசேனா போன்ற அமைப்புகள் பல்வேறு முகங்களோடு மலையகத்தில் தமது கூடாரங்களை அமைத்து பலப்படுத்தி வரும் சூழ்நிலையில் இந்தியாவில் இருந்து ஆசிரியர்களை வரவழைத்து அவர்களுக்கு மலையகத்தில் ஆசிரியர் நியமனம் கொடுக்க வேண்டும் என்பது மறைமுக இந்திய அரசியல் நலன்கள் இருந்த கோரிக்கையாகவே சிந்திக்க வேண்டும்.

மலையகத்தில் ஏற்கனவே அடிப்படைவாத கிறிஸ்தவ சமய கட்டமைப்போடு பல இறக்குமதி செய்யப்பட்ட சமய அமைப்புகள் மலையகத்தின் பாரம்பரிய சமய பண்பாட்டு கலாச்சாரத்தை அழிக்கவும் சிதைக்கவும் பல்வேறு பலமான வேலை திட்டங்களோடு களமிறங்கியிருக்கையில் இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை இறக்குமதி செய்து மலையகத்தில் அவர்களுக்கு ஆசிரியர் நியமனம் கொடுக்க ஆலோசனை முன்வைப்பது மலையக மக்களின் கல்வியை மையப்படுத்தி அங்கு சமய மற்றும் கலாச்சார ரீதியில் இன அழிப்பினை துரிதப்படுத்தும் மாற்றுத் திட்டமாகவும் இருக்கலாம்.

மலையக மக்கள் இந்நாட்டின் இன்னும் ஒரு தேசிய இனமாக வரத்துள்ளதோடு இந்திய வம்சாவளியினர் என தம்மை அடையாளப்படுத்தாது மலையத் தமிழ் என்றே அடையாளப்படுத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை அரசியல் வலுப்பெற்றுள்ளது. இதனை விரும்பாத இந்திய அடிவருடி அரசியல்வாதிகளும் அவர்களின் கை கூலிகளும் மலையகத்தில் இயங்கி வரும் சுழல் நிலையில் இந்திய ஆசிரியர் நியமன கோரிக்கை என்பது மலை மக்களின் அரசியல் சிந்தனையை அழிக்கும் வேலை திட்டம்களில் ஒன்றாகவும், இன அழிப்பின் இன்னுமொரு வடிவமாகவுமே பார்க்க வேண்டி உள்ளது.

மலையக மக்கள் தங்களுடைய வாக்குகள் மூலம் தமக்கான நாடாளுமன்ற பிரதிநிதிகள் தெரிவு செய்யக்கூடிய வாய்ப்பு 1977 தொடர்ந்து கிடைத்தது. 1977-2024 இடையிலான காலகட்டத்தில் மலையக அரசியல்வாதிகள் தங்களுடைய அரசியலை பலப்படுத்திக் கொள்வதற்கும் தாங்கள் கட்சியையும் அதனோடு ஒட்டிய தொழிற்சங்கத் தையும் வளர்க்க எடுத்த பல்வேறு முயற்சிகளை சிந்திக்கும்போது மலையக கல்வியின் எதிர்காலம் திட்ட நலன் கருதி என்னவாக கட்சிகளையும் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பின்னால் சிறந்தது வரலாறு தங்களுடைய அரசியலையும் கட்சி அரசியலையும் வளர்த்துக் கொள்வதற்கு இவர்கள் எடுத்த முயற்சியோடு ஒப்பிடுகையில் மலையக கல்வி தொடர்பான இவர்களுடைய செயற்பாடு மிக மந்த கதியிலேயே நிகழ்ந்தது என்பதற்கு தற்போது முன் வைத்திருக்கின்ற இந்திய ஆசிரியர்களை வரவழைப்பதற்கான கோரிக்கை நல்ல உதாரணமாகும்.

அரச பாடத்திட்டத்திற்கு ஏற்ப அந்தந்த துறைகளில் நிறைவான அறிவு சார்ந்த ஆசிரியர்கள் மலையகத்தின் இல்லையாயின் அரச கல்வி கொள்கை மலையகத்தில் அமுலாக்கத்தில் பிழை உள்ளது. இந்த நூற்றாண்டிலும் மலையக பிள்ளைகள் கல்வியிலிருந்து தூர விலகி செல்கின்றார்கள். அல்லது கல்வியில் தேர்ச்சி அடையாதிருக்கின்றார்கள் என்று கூறுவதும் மலையக மக்களின் வாழ்வு கலாச்சாரத்திலும் பொருளாதாரத்திலும் பிழையான திட்டம் உட்புகுத்தபபட்டுள்ளது என்றே பொருள் கோடல் வேண்டும் . இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை கொண்டு வர வேண்டும் என்பது அரசியல் அறம் இன்மையின் வெளிப்பாடு எனலாம்.

மலையக கல்வியை பலப்படுத்தவும் வளப்படுத்தவும் மலையக படித்த பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்களை பெற்றுக் கொடுக்கவும்; மேலதிகா ஆசிரியர்களை பெற்றுக்கொள்ள வடக்கு கிழக்கு பட்டதாரிகளுக்கு நியமனங்களை உரித்தாக்கவும் அவசர வேலை திட்டத்தை தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுபினர்களோடு கூட்டுச் சேர்ந்து அரசுக்கு முன்மொழிதல் நலமாகும்.” – என்றுள்ளது.

Share This