ஜனாதிபதியை வாழ்த்திய ஹர்ஷ டி சில்வா

ஜனாதிபதியை வாழ்த்திய ஹர்ஷ டி சில்வா

ஹான்ஸ் விஜேசூரிய போன்றவர்களின் ஈடுபாட்டுடன் ஜனாதிபதி தனது பயணத்தை ஆரம்பித்தில் மகிழ்ச்சி அடைவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அரசியல் கருத்து எதுவாக இருந்தாலும், டிஜிட்டல் மயமாக்கல் நடக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

“நாங்கள் நீண்ட காலமாக அதைச் செய்ய முயற்சித்து வருகிறோம், ஆனால் அதைச் செயல்படுத்த முடியவில்லை.

அரசியல் பேதங்கள் இல்லாமல் டிஜிட்டல் பொருளாதார உள்கட்டமைப்பின் வளர்ச்சியை ஆதரிக்க எதிர்ப்பார்க்கிறோம்.

சிறிது காலமாக மின்னணு அடையாள அட்டையை உருவாக்க முயற்சித்து வருகிறோம், ஆனால் அதை வெற்றிகரமாக செயல்படுத்த முடியவில்லை” என ஹர்ஷ டி சில்வா கூறினார்.

Share This