எண் 12 இற்கு இவ்வளவு சிறப்புக்கள் உள்ளனவா?

எண் 12 இற்கு இவ்வளவு சிறப்புக்கள் உள்ளனவா?

பொதுவாக ஒவ்வொரு எண்ணுக்கும் ஒவ்வொரு குணாதிசயம் உண்டு. அந்த வகையில் எண்களில் பன்னிரெண்டு என்பது மிகவும் உயர்வான எண்ணாக கருதப்படுகிறது.

அதன்படி எண் 12 இன் சிறப்பம்சங்கள் குறித்து பார்ப்போம்.

  • ஒரு மனிதனின் ஜாதகத்தில் 12 கட்டங்கள் இருக்கும். அதில் ஒவ்வொரு கட்டமும் ஒவ்வொரு பாவத்தைக் குறிக்கிறது எனக் கூறுவர். இதில் 12 ஆவது பாவம் என்பது மோட்ச பாவம், விரய பாவம் எனும் பிறவிச்சுழல் தொடர்கிறதா..நிறைவடைகிறதா..என்பதைக் குறிக்கும்.
  • கோவில்களில் கோபுரங்களுக்கு 12 வருடங்களுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெறும்.
  • நாளொன்றை இரண்டாகப் பிரித்தால் பகல், இரவு. அதைப் போலவே வருடம் ஒன்றுக்கு 12 மாதங்கள்.
  • வான மண்டலத்தை மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் என 12 ராசிகளாக பிரித்துள்ளனர்.
  • மேற்கத்தேய இசையில் 12 ஸ்வரங்கள் உள்ளன.
  • ஒரு டசனின் எண்ணிக்கை 12 ஆகும்.
  • சீன மதத்தில் 12 விலங்கு ராசிகள் உள்ளன.
Share This