தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகள் எதிர்வரும் வாரம் ஆரம்பிக்கப்படும்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கண்காணிப்பு நடவடிக்கைகள் இம்மாதம் 17ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என பஃப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
அதன்படி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுடன் கலந்தாலோசித்து அதற்கான முதற்கட்ட திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக பஃப்ரல் அமைப்பின் நிர்வாக பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
மேலும், பஃப்ரல் அமைப்பின் முறைப்பாடுகள் பிரிவை நிறுவ திட்டமிட்டுள்ளதாகவும் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.