நுவரெலியா இ.போ.ச டிப்போவில் படுகொலை – பணமும் கொள்ளை
நுவரெலியா இலங்கை போக்குவரத்து சபை தலைமை காரியாலயத்தில் பாதுகாப்பு கடமையில் இருந்த முதியவர் ஒருவரை கொலை செய்யப்பட்டு அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 8 இலட்சத்து ஐம்பது ஆயிரத்திற்கும் அதிகமான பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (06) அதிகாலையில் இடம்பெற்றுள்ளது.
நுவரெலியா கல்வே கிராமத்தைச் சேர்ந்த லோகநாதன் என்ற 85 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
கொலை செய்யப்பட்ட நேரத்தில் மூன்று பேர் பாதுகாப்பு கடமையில் இருந்துள்ளனர். இவர்கள் நித்திரையிலிருந்த போதே உள் நுழைந்த இனந்தெரியாதவர்கள் பாதுகாப்பு கடமையில் இருந்த முதியவரை படுகொலை செய்ததன் பின்னர் பாதுகாப்பாக வைத்திருந்த பணத்தை கொள்ளையிட்டுள்ளதாக தெரியருகிறது.
நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதவான் பார்வையிட்டதன் பின்னர் விசாரணைகள் மேற்கொண்டு சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(செ.திவாகரன்)