எதிர்க்கட்சி தலைவர் விரும்பினால் பாடசாலை பேருந்துகளை நன்கொடையாக வழங்க முடியும்

எதிர்க்கட்சித் தலைவர் விரும்பினால் மீண்டும் பாடசாலைகளுக்கு பேருந்துகளை நன்கொடையாக வழங்க சந்தர்ப்பம் உள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கெளசல்யா ஆரியரத்ன நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“இலவசக் கல்வியை விற்பனை செய்ய வடிவமைக்கப்பட்ட நவதாராளவாதக் கொள்கைகளை எதிர்த்த வரலாறு எங்களுக்கு உண்டு.
பத்தாயிரம் பாடசாலைகளுக்கு பத்தாயிரம் கோடீஸ்வரர்களை தெரிவு செய்வது எங்களது கொள்கை அல்ல.
இலவசக் கல்வியை எங்களுடைய அரசாங்கத்தின் பொறுப்பிலிருந்து நழுவ விட நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
தனியார் துறையும் இணைந்து செயல்பட முடியும்” என அவர் தெரிவித்தார்.