இலங்கை வந்தடைந்தார் உலகப் புகழ்பெற்ற பாடகர் ஆலோ பிளாக்

இலங்கை வந்தடைந்தார் உலகப் புகழ்பெற்ற பாடகர் ஆலோ பிளாக்

உலகப் புகழ்பெற்ற அமெரிக்க பாடகர் ஆலோ பிளாக், மூன்று நாள் விஜயமாக இன்று காலை திங்கட்கிழமை (10) காலை கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்தார்.

இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகளைத் தேடுவதற்காக அமெரிக்க இசைக்கலைஞரும் தொழில்முனைவோருமான ஆலோ பிளாக்  இலங்கைக்கு வந்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் (PMD) செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மூத்த ஆலோசகர் பேராசிரியர் கோமிகா உடுகமசூரியவின் அழைப்பின் பேரில் பிளாக் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

அமெரிக்காவில் புகழ்பெற்ற பாடகரும் தொழில்முனைவோருமான பிளாக், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுடன் கலந்துரையாடி முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பாக தொடர்புடைய அதிகாரிகளைச் சந்திக்க உள்ளார்.

இந்த அழைப்பு, புதுமைகளை வளர்ப்பதற்காக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வணிகமயமாக்கலுக்கான தேசிய முயற்சி (NIRDC) இன் கீழ் அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்று செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

Share This