கனடாவில் துப்பாக்கி பிரயோகம் – பலர் வைத்தியசாலையில்

கனடாவில் அடையாளந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.
டொரொண்டோவில் ஸ்கார்பரோ நகரிற்கு அருகில் நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காயமடைந்தவர்களுக்கு உயிர் ஆபத்து இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் 20 முதல் 50 வயதிற்குட்பட்டவர்களே காயமடைந்துள்ளனர்.
அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கடந்த வருடமும் டொரொண்டோவில் துப்பாக்கி பிரயோகங்களினால் 43 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.