“என் வாழ்க்கையை படமாக எடுத்தேன் பல மிரட்டல்கள் வந்தன” – சோனா

“என் வாழ்க்கையை படமாக எடுத்தேன் பல மிரட்டல்கள் வந்தன” – சோனா

கவர்ச்சி நடிகையான சோனா, அவரது வாழ்க்கையை ஸ்மோக் எனும் பெயரில் வெப் தொடராக எடுத்திருக்கிறார். அவரே அத் தொடரை இயக்கியும் உள்ளார்.

இந்நிலையில் அண்மையில் அவர் அளித்த பேட்டியில்,“நடிகையானதன் பின்னர் எனது வாழ்க்கையில் என்னென்ன சம்பவங்கள் நடந்ததோ அதனை மையமாகக் கொண்டு இந்த வெப் தொடரை எடுத்துள்ளேன்.

இந்த தொடரை எடுக்கக்கூடாது என சிலர் என்னை மிரட்டினர், பயந்து அழுதேன், ஓடி ஒளிந்தேன். இருப்பினும் மிரட்டல்கள் வந்துகொண்டே இருந்தன.

ஒரு கட்டத்துக்கு மேல் துணிச்சலுடன் இந்த வெப் தொடரை எடுத்து முடித்தேன். தொடர் சிறப்பாக வந்துள்ளது. இதில் முகேஷ், இளவரசு, ஜீவா ரவி, சோனியா ஆகியோர் நடித்துள்ளனர்.

இதனை எட்டு எபிசோடுகளாக எடுத்துள்ளேன். யாரையும் பழி வாங்க எடுக்கவில்லை. இனி கவர்ச்சி வேடங்களில் நடிக்க மாட்டேன். குணச் சித்திர வேடங்களில் மட்டுமே நடிப்பேன்” எனக் கூறியுள்ளார்.

Share This