இம்யூனோகுளோபுலின் மருந்துகளில் தண்ணீர் கலக்கப்பட்டுள்ளதாக தகவல்

இம்யூனோகுளோபுலின் மருந்துகளில் தண்ணீர் கலக்கப்பட்டுள்ளதாக தகவல்

கடந்த அரசாங்கத்தின் போது இறக்குமதி செய்யப்பட்ட இம்யூனோகுளோபுலின் தடுப்பு மருந்துகளில் நீர் இருப்பதாக சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது தொடர்பான அறிக்கை கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பெப்புரோன் தடுப்பூசி முன்பு 70,000 ரூபாய்க்கு விற்கப்பட்டது, இப்போது நாங்கள் அதை 370 ரூபாய்க்கு வாங்குகிறோம் என்றும் அவர் கூறினார்.

முன்னாள் சுகாதார அமைச்சர் ஒரு இலட்சத்து 20,000 ரூபாய்க்கு இம்யூனோகுளோபுலின் தடுப்பூசியை வாங்கினார், இப்போது நாங்கள் அதை 30,000 ரூபாய்க்கு வாங்குகிறோம் என்று பிரதி அமைச்சர் கூறினார்.

அந்த ஒரு டெண்டரில் இருந்து சேமிக்கப்பட்ட தொகை 20 மில்லியன் ரூபாய் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

Share This