எஸ்கலேட்டர்களின் ஓரத்தில் இருக்கும் ப்ரஷ்…எதற்காக தெரியுமா?

எஸ்கலேட்டர்களின் ஓரத்தில் இருக்கும் ப்ரஷ்…எதற்காக தெரியுமா?

படிக்கட்டுகளில் ஏற முடியாதவர்களுக்கென தானியங்கிபடி எனும் எஸ்கலேட்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வகை எஸ்கலேட்டர்களை விமான நிலையம், ஷொப்பிங் மோல்களில் காணலாம்.

இவ்வாறு எஸ்கலேட்டர்களில் நாம் ஏறும்போது ஓரங்களில் ப்ரஷ்கள் வைக்கப்பட்டிருக்கும். ஒரு சிலர் அதில் காலணிகளை சுத்தம் செய்வதை பார்த்திருப்போம்.

உண்மையில் இந்த ப்ரஷ்கள் இருப்பதற்கான காரணம் என்னவென்றால், மக்களின் ஷு லேஸ்கள், ஸ்கார்ப்கள், கால்விரல்கள் ஆகியன கூட எஸ்கலேட்டர் படிகளின் ஓரங்களிலுள்ள சிறிய இடைவெளிகளில் சிக்கி இயந்திரங்களுக்குள் இழுக்கப்பட்ட பல விபத்துக்கள் ஏற்படுகின்றன.

எனவே இந்த ப்ரஷ்கள் இவ்வகையான விபத்துக்களை தடுக்க வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை எஸ்கலேட்டரின் நகரும் பகுதிகளிலிருந்து விபத்துக்கள் ஏற்படாமல் பாதுகாக்கின்றன.

இந்த ப்ரஷ்கள் பை, கால், ஆடைக்கு மிக அருகில் சென்றால் இந்த ப்ரஷ்களில் உள்ள முட்கள் அதனை பின்னுக்குத் தள்ளி விடுகின்றன. எனவே எஸ்கலேட்டர்களில் இருக்கும் ப்ரஷ்களின் பயன் அதில் பயணிப்பவர்களின் பாதுகாப்புக்கு ஆகும்.

Share This