ஐபிஎல் தொடரில் புதிய விதிமுறை – மீறினால் அபராதம்

ஐபிஎல் கிரிக்கெட் தொடர், எதிர்வரும் மார்ச் 22 முதல் மே 25 வரை நடைபெறவுள்ள நிலையில், போட்டிகளுக்கான புதிய விதிமுறைகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (பிசிசிஐ) அறிவித்துள்ளது.
இதன்படி, வீரர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பயிற்சிக்கு செல்லும்போது கூட வீரர்கள் தங்களது அணியின் நிர்வாகம் ஏற்பாடு செய்யும் பேருந்துகளில் தான் பயணம் செய்ய வேண்டும் என்றும் தனியாக பிரத்யேகமாக வாகனங்களை கொண்டு வந்து அதில் பயணிக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளது.
பயிற்சி நாட்களில் கூட வீரர்களின் உறவினர்கள் வீரர்களின் ஓய்வறைக்கு வரக்கூடாது. மேலும் மைதானத்தில் வீரர்கள் பிராக்டீஸிற்கு வரும்போது உரிய அங்கீகார அட்டை கொண்டு வர வேண்டும்.
அவ்வாறு எடுத்து வர மறுத்தால் அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேபோன்று இனி ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று முடிந்த பிறகு நடக்கும் நிகழ்ச்சிகளில் வீரர்கள் யாரும் ஸ்லீவ்லெஸ் ஜெர்சியை அணிந்து வரக்கூடாது.
அப்படி இந்த விதிமுறையை மீறியும் வீரர்கள் ஸ்லீவ்லெஸ் ஜெர்சியை அணிந்து வந்தால் முதல் முறை எச்சரிக்கை விடுக்கப்படும் என்றும் அதன் பிறகு கண்டிப்புடன் கூடிய அபராதமும் விதிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.