மின்சாரம் தாக்கி தாயும், மகனும் பலி

மின்சாரம் தாக்கி தாயும், மகனும் பலி

வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியின் மின்கலத்தை திருடர்களிடமிருந்து பாதுகாக்க வீட்டு உரிமையாளர் சட்டவிரோதமான முறையில் பெறப்பட்டிருந்த மின் கம்பியில் சிக்கி அவரது மனைவியும் மகனும் உயிரிழந்ததாக சூரியவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் சூரியவெவ வீரியகம பகுதியில் வசித்து வந்த 38 வயதான நான்கு குழந்தைகளின் தாயான விஜயமுனிகே எனோகா ஹர்ஷனி மற்றும் அவரது ஐந்து வயது மகன் வீரசிங்க கங்கன இதுவர ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

வீட்டின் உரிமையாளர் சில நாட்களுக்கு முன்பு ஒரு சிறிய லொறியை வாங்கியிருந்தார், லொறி வீட்டில் நிறுத்தப்பட்டிருந்தபோது, ​​முந்தைய நாள் திருடர்கள் லொறியின் பேட்டரியை அகற்றிவிட்டனர்.

ஒரு தீர்வாக, திருடர்களிடமிருந்து லொறியைப் பாதுகாக்க வீட்டு உரிமையாளர் சட்டவிரோத மின் கம்பியைப் பொருத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சட்ட விரோத மின் கம்பியின் மின்சாரத்தை துண்டிக்க முடியாமல் போனமையின் காரணமாக இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

CATEGORIES
Share This