தவறான செய்திகளை வெளியிடும் வலைத்தளங்கள் விதிமுறைகளுக்குட்படுத்தப்பட வேண்டும்

தவறான செய்திகளை வெளியிடும் வலைத்தளங்களை சில விதிமுறைகளுக்கு உட்படுத்த எதிர்ப்பார்ப்பதாக தேசிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி தெரிவித்தார்.
இன்றைய தினம் நாடாளுமன்றில் நிதி ஒதுக்கீட்டு குழு விவாதத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“ஊடகங்களை உகந்த நிலைக்குக் கொண்டுவரும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது.
ஊடகவியலாளர்கள் தங்கள் தொழிலைத் தொடர வேண்டிய வரம்புகளை அரசியலமைப்பு வகுக்கிறது.
ஊடகவியலாளர்கள் அதன் வரம்புகளை அறிந்திருக்க வேண்டும்.
ஆபாசமான கருத்துக்களை பயன்படுத்தக் கூடாது என்று தண்டனைச் சட்டம் கூறினாலும், அது அவ்வாறு நடப்பதில்லை.
சில நேரங்களில், வெறுப்பைத் தூண்டும் செய்திகள் ஊடகங்களில் பரப்பப்படுகின்றன.
இவை சில ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்பதில் அரசாங்கத்தின் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது” என அவர் கூறினார்.