தேசபந்து தென்னகோன் தலைமறைவு – தகவல் தெரிந்தால் அறியத்தருமாறு கோரிக்கை

தேசபந்து தென்னகோன் தலைமறைவு – தகவல் தெரிந்தால் அறியத்தருமாறு கோரிக்கை

கைது செய்வதற்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பில் தகவல் தெரிந்தால், குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அறியத்தருமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இன்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க இதனைத் தெரிவித்தார்.

வெலிகம, பெலேன பகுதியில் உள்ள உணவகமொன்றுக்கு அருகில் 2023 ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக முன்னாள்  பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட எட்டு பேரைக் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை குற்றப்புலனாய்வு திணைக்களம் முன்னெடுத்து வருகின்றது.

அவர் தங்கியிருந்ததாகக் கூறப்படும் கொழும்பில் உள்ள வீடு உட்பட நான்கு வீடுகள் அண்மையில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

எனினும், அவர் குறித்த வீடுகள் எவற்றிலும் இருக்கவில்லை.

மாத்தறை நீதவான் நீதிமன்றம் அவர் வெளிநாடு செல்வதை தடுக்கும் வகையிலான பயணத்தடையை விதித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share This