அவுஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையில் சூறாவளி

அவுஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையில் சூறாவளி

அவுஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையில் சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது.

குயின்ஸ்லாந்து மற்றும் வடக்கு நியூ சவுத் வேல்ஸ் ஆகிய பகுதிகளுக்கு கடுமையான பாதிக்கப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஆல்ஃபிரட் என்று பெயரிடப்பட்ட இந்த சூறாவளி அடுத்த 48 மணி நேரத்திற்குள் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பகுதி இவ்வளவு கடுமையான சூறாவளியால் பாதிக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே நான்கு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பலத்த மழை, பலத்த காற்று மற்றும் திடீர் வெள்ள அபாயத்தை எதிர்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

பிரிஸ்பேன் அருகே இவ்வளவு சக்திவாய்ந்த சூறாவளி கடைசியாக 1974 ஆம் ஆண்டு தாக்கியமை குறிப்பிடத்தக்கது.

Share This