டெய்சி பாரஸ்டுக்கு பிணை

குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட டெய்சி பாரஸ்டுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, அவர் தலா 5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள மூன்று சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இன்று (05) காலை குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு கடுவல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து அவருக்கு பிணை வழங்கப்பட்டது.