இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும் வெள்ளை மிளகு

மிளகு அன்றாடம் நாம் சமையலுக்கு பயன்படுத்தும் ஒரு பொருளாகும். இதில் கருப்பு நிற மிளகு, வெள்ளை மிளகு என இரண்டு வகைகள் உண்டு. அதில் வெள்ளை மிளகின் நன்மைகள் குறித்து பார்ப்போம்.
- வெள்ளை மிளகு மூளையின் செயல்பாடுகளை மேம்படுத்த உதவுவதோடு, செல்கள் சிதைவடைவதையும் தடுக்கிறது.
- வயிற்றுப் புண்கள் உருவாகுவதிலிருந்து வெள்ளை மிளகு பாதுகாப்பு அளிக்கிறது. அத்துடன் வயிற்றில் உருவாகும் பக்டீரியாவையும் அளிக்க உதவுகிறது.
- வெள்ளை மிளகில் உள்ள பைப்பரின் ஜீரண சக்தியை அதிகப்படுத்துகிறது. குடல் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.
- உடல் வீக்கத்தை குறைத்து வலியை குறைக்கிறது.
- வெள்ளை மிளகை நன்றாக அரைத்து மூட்டு வலி இருக்கும் இடத்தில் பற்று போட்டால் வலி குணமாகும்.
- தயிருடன் வெள்ளை மிளகை கலந்து உச்சந் தலையில் தேய்த்து அரை மணித்தியாலம் வைத்திருந்து, பின்னர் கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் பொடுகு வராமல் தடுக்க முடியும்.
- வெள்ளை மிளகு இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.
- ஆண்களை அதிகம் பாதிக்கும் புரோஸ்டேட் புற்றுநோயை தடுக்கிறது.
- இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. உடலிலுள்ள நல்ல கொழுப்பை பராமரிக்க உதவுகிறது.
- உடல் எடையைக் குறைக்கவும் வெள்ளை மிளகு உதவுகிறது.
- தோல் சுருக்கங்கள், கண்களுக்கு கீழ் இருக்கும் கரு வளையங்களையும் நீக்குகிறது.