லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம்…நயன்தாராவின் அறிக்கை

ஐயா திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. இவரை லேடி சூப்பர் ஸ்டார் என்று அனைவரும் அன்போடு அழைப்பர்.
அவர் நடிக்கும் திரைப்படங்களிலும் இந்த டைட்டில் கார்ட் இடம்பெறும்.
இந்நிலையில் தன்னை இனிமேல் யாரும் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம் என ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது, “ வணக்கம். உங்களில் பலர் என்னை லேடி சூப்பர் ஸ்டார் என்று அன்புடன் குறிப்பிட்டுள்ளீர்கள். இந்த பட்டம் உங்கள் பாசத்திலிருந்து பிறந்தது.
நீங்கள் அனைவரும் என்னை நயன்தாரா என்று அழைக்க வேண்டும் என பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். அந்தப் பெயர் என் இதயத்துக்கு மிகவும் நெருக்கமானது என நான் உணர்கிறேன்.
பட்டங்களும் பாராட்டுகளும் விலை மதிப்பற்றவை. ஆனால், சில நேரங்களில் நாம் பகிர்ந்துகொள்ளும் நிபந்தனையற்ற பிணைப்பிலிருந்து நம்மைப் பிரிக்கும் ஒரு பிம்பத்தை உருவாக்கக்கூடும்.
சினிமா தான் நம்மை ஒற்றுமையாக வைத்திருக்கிறது, அதை ஒன்றாகக் கொண்டாடும் என அன்புடன் நன்றியுடன் நயன்தாரா” என அறிக்கையை வெளியிட்டுள்ளார்.