ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஸ்டீவ் ஸ்மித் அறிவிப்பு

ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஸ்டீவ் ஸ்மித் அறிவிப்பு

அவுஸ்திரேலிய அணியின் நடசத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

தற்போது நடைபெற்று வரும் ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண தொடரில் அணித் தலைவராக ஸ்டீவ் ஸ்மித் செயற்பட்டிருந்தார்.

எவ்வாறாயினும், நேற்று இடம்பெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியிடம் தோல்வியடைந்து அவுஸ்திரேலியா தொடரில் இருந்து வெளியேறியிருந்தது.

இந்நிலையில், ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்துள்ளார். எவ்வாறாயினும், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்தும் விளையாடவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

2028ஆம் ஆண்டு லொஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறும் ஒலிம்பிக்கில் பங்கேற்க வேண்டும் என்ற விருப்பத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். 2028 ஒலிம்பிக் போட்டிகளில் முதல் முறையாக டி20 போட்டிகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This