துளசி மாலை அணியப் போறீங்களா? கண்டிப்பா அசைவம் சாப்பிடக்கூடாது

துளசி மாலை அணியப் போறீங்களா? கண்டிப்பா அசைவம் சாப்பிடக்கூடாது

நம்மில் அதிகமானோர் துளசி மாலை அணிவர். துளசி மாலை என்பது ஆன்மீகம் மற்றும் உடல் ரீதியாக நல்ல மாற்றங்களை ஏற்படத்தக்கூடியது.

துளசி மாலையானது தீய சக்திகள், எதிர்மறை ஆற்றல்கள், சூனியம் ஆகியவற்றை விரட்டும் ஆற்றல் கொண்டது.

108 தடவைகள் துளசி மணிகளை உச்சரிக்கும்போது தெய்வ பக்தி அதிகமாகிறது.

இம் மாலை துளசி செடியின் வேர், கிளை மற்றும் மரங்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த துளசி மாலை ராம துளசி மாலை, ஷ்யாமா துளசி மாலை எனும் இரண்டு வகைகளாக காணப்படுகின்றன.

இந்த துளசி மாலையை வாங்கியதும் அதனை கங்கை நீர் மற்றும் பாலில் கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் அதில் ஒட்டியிருக்கும் அசுத்தங்கள் நீங்கும்.

பின் அதனை நன்கு துடைத்து கிருஷ்ணர் அல்லது விஷ்ணுவின் படத்தின் அருகில் வைத்து மந்திரங்களை உச்சரித்த பின்னர் அணிந்துகொள்ள வேண்டும்.

இதனை அணிந்த பின்னர் சில விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

  • துளசி மாலையை அணிந்த பின்னர் மது, புகைப்பிடித்தல், சூதாட்டம் ஆகியவற்றிலிருந்து விலகியிருக்க வேண்டும்.
  • துளசி மாலையை மற்றவர்களுடன் மாற்றிக்கொள்ளக் கூடாது.
  • அசைவம், வெள்ளைப்பூண்டு, வெங்காயம் சாப்பிடக்கூடாது.
  • பொய் பேசுதல், வீண் வார்த்தைகள் பேசுதல், தவறான நடத்தை ஆகியவற்றை முற்றாக தவிர்க்க வேண்டும்.
  • பெண்கள் மாதவிடாய் காலத்தில் துளசி மாலையை அணியக்கூடாது.
  • குளிக்கும்போது, உடற்பயிற்சி செய்யும்போது மாலையை கழற்றி வைக்க வேண்டும்.
  • மாலையை அணிந்தவாறு மரண வீடு, பூப்பெய்திய வீடுகளுக்கு செல்லக்கூடாது.
Share This