விபரீத முடிவெடுத்த பாடகி கல்பனா…ஆபத்தான நிலையில் மருத்துவமனையில்

பிரபல பின்னணி பாடகி கல்பனா தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளமை திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இவர் தாஜ்மஹால், மாமன்னன், மனிதன், ரஜினி முருகன் போன்ற திரைப்படங்களில் பாடியுள்ளார்.
அதுமட்டுமின்றி தெலுங்கு பிக்பொஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.
இந்நிலையில் தெலுங்கானா ஐதரபாத் மாவட்டம் நிசாம்பத் நகரிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் இரண்டு நாட்களாக அவரத வீடு திறக்கப்படாமல் இருந்ததைக் கண்டு அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்து பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
விரைந்து வந்த பொலிஸார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கல்பனா மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
பொலிஸார் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ள நிலையில் அவருக்கு செயற்கை சுவாச கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.