பார் பர்மிட்கள் தொடர்பில் மேலும் விளக்கமளிக்க வேண்டும்
பார் பர்மிட்கள் தொடர்பில் மேலும் விளக்கமளிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கேள்வியெழுப்பியுள்ளார்.
பார் பர்மிட் விபரங்களை வெளியிட்டமைக்கு நன்றி எனவும் அவர் தெரிவித்தார்
இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போதே இவ்விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கேள்வியெழுப்பியுள்ளார்.
இதேவேளை, பார் பர்மிட்களுடன் வழங்கப்பட்ட விண்ணப்பங்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழங்கிய பரிந்துரைக் கடிதங்கள் தற்போது எங்கு உள்ளன? இது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக கூறினீர்கள், விசாரணைகளை மேற்கொள்பவர்கள் யார் பொலிஸாரா குற்றப்புலனாய்வுப் பிரிவினரா அல்லது ஜனாதிபதி செயலகமா? இந்த பார் பர்மிட்கள் இரத்து செய்யப்படுமா என்பது தொடர்பில் விளக்கமளிக்க வேண்டும் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஒக்ரோபர் மாதம் 6ஆம் திகதி வரையான காலப்பகுதியில் கலால் திணைக்களம் 361 மதுபான அனுமதிப்பத்திரங்களை வழங்கியுள்ளதாக சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க நேற்று (04) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்தே இன்று நாடாளுமன்ற அமர்வின் போது இராசமாணிக்கம் சாணக்கியன் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.