விலங்குகளை 5 நிமிடங்களில் கணக்கெடுக்க வேண்டும் – நாமல் கருணாரத்னவின் கருத்தை விமர்சித்த சமார சம்பத்

விலங்குகளை 5 நிமிடங்களில் கணக்கெடுக்க வேண்டும் – நாமல் கருணாரத்னவின் கருத்தை விமர்சித்த சமார சம்பத்

நாடளாவிய ரீதியில் உள்ள தோட்டங்கள் மற்றும் விவசாய நிலங்களில் சுற்றித் திரியும் குரங்குகள், மயில்கள் மற்றும் மரஅணில்களின் கணக்கெடுப்பை 15 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.

அதன்படி, சம்பந்தப்பட்ட வீடுகளின் உரிமையாளர்கள் தங்கள் தோட்டங்களில் சுற்றித் திரியும் வனவிலங்குகளை எண்ணி தகவல்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், இதற்காக 5 நிமிடங்கள் வழங்கப்படும் என்றும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள அனைத்து அதிகாரிகளும் இதில் ஈடுபடுவார்கள், அவர்கள் பொதுமக்களுக்கு அறிவிப்பார்கள் என்று பிரதி அமைச்சர் கூறினார்.

ஒருவரின் தோட்டத்திலோ அல்லது பண்ணையிலோ எத்தனை மர அணில்கள், மயில்கள், குரங்குகள் அல்லது பிற விலங்குகள் இருந்தன என்பதை 5 நிமிடங்களுக்குள் கணக்கிட வேண்டும் என்றும், உரிமையாளர் இல்லாத நிலம் இருந்தால், அருகிலுள்ள தோட்டத்தைச் சேர்ந்த ஒருவரை அதிகாரிகள் மூலம் அந்தத் தோட்டத்திலும் பொருத்தமான கணக்கெடுப்பை நடத்த அனுப்ப வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்த கணக்கெடுப்புக்கு 5 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டதற்கான காரணம், இந்த 5 நிமிடங்களுக்குள் விலங்குகள் மற்ற தோட்டங்களுக்கு தப்பிச் செல்ல வாய்ப்பு இருப்பதால்தான் என்று சுட்டிக்காட்டிய அவர், இந்தத் தகவல்கள் அனைத்தும் அதிகாரிகள் மூலம் அமைச்சகத்திற்குக் கிடைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்ச்சிக்குப் பிறகு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை, விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்னவின் இந்த கருத்தை விமர்சித்து நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் இன்று (03) நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்டிருந்தார்.

“ஐந்து நிமிடங்களுக்குள் விலங்குகளை கணக்கெடுக்க முடியுமா?” என அவர் கேள்வியெழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This