எரிபொருள் நெருக்கடி – அரசாங்கம் மீது சந்தேகம்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மாற்ற அரசாங்கம் முயற்சிப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதாக இலங்கை பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்காக அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அதன் துணைத் தலைவர் குசும் சதநாயகே தெரிவித்தார்.
இதற்கிடையில்,இன்று (03) காலை ஜனாதிபதி செயலகத்திற்குச் சென்று பெற்றோல் நிலைய உரிமையாளர்களின் மூன்று சதவீத கமிஷன் குறைப்பு தொடர்பான மகஜர் ஒன்றை கையளிக்கவுள்ளதாக தெரிவித்தார்.
இதனிடையே, லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்தின் விநியோகஸ்தர்களும் எரிபொருள் முன்பதிவுகளை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளனர்.
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் செல்வாக்கு காரணமாக, ஒரு ஆர்டருக்கு 35,000 நட்டம் ஏற்படுவதாக அதன் தலைவர் கோசல விதானராச்சி தெரிவித்தார்.
எவ்வாறாயினும், நாட்டில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பு இருப்பதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் வரை எரிபொருள் கையிருப்பு வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அதன் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். நேற்று 1,500க்கும் மேற்பட்ட எரிபொருள் பதிவுகள் பெறப்பட்டன.
இந்நிலையில், பெற்றோலிய இருப்புக்கள் விநியோகிக்கப்படுவதாக தெரிவிக்ககப்பட்டுள்ளது.
தற்போதுள்ள பிரச்சினைகள் குறித்து எரிபொருள் விநியோகஸ்தர்கள் மற்றும் அரசாங்க பிரதிநிதிகளுக்கு இடையே நாளை கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
இதன்படி, படி நாளை காலை 9.00 மணிக்கு கலந்துரையாடலில் பங்கேற்பதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.